கஜா புயலால் கடந்த 4 நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தொழில் முடங்கியுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களை தாக்கிய கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானலும் கஜா புயலின் கோரத் தாண்டவத்திற்கு பாதிப்பிற்குள்ளானது. கொடைக்கானலின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மரங்கள் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சுற்றுலாத் தலங்களான 12 மைல் சுற்றுச்சாலை, ஏரி படகு சவாரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா உள்ளிட்ட அனைத்து தலங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இன்றி சுற்றுலா சார்ந்த தொழில்கள் முடங்கியுள்ளன.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல், வத்தலகுண்டுசாலையில், இலகு ரக உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. எனவே, சுற்றுலாப் பயணிகளின்றி கொடைக்கானல் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. எனவே போக்குவரத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்