[X] Close

ரூ.1000 கோடியில் ராமானுஜருக்கு பிரமாண்ட சிலை!

Statue-for-Sri-Ramanuja-planned-in-Hyderabad

ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் வைஷ்ண குரு  ராமானுஜர். பல்வேறு இடங்களுக்கு சென்று சமத்துவத்தைப் பரப்பியவர். ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சிபுரம் கோயில்களுக்கு நேரடியாக வருகை தந்து பூஜை நடைமுறை களை வழிநடத்தி செயல்படுத்தியவர். 


Advertisement

அவரது பஞ்சலோக சிலை, ஐதராபாத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. 216 அடியில் அமைய இருக்கும் இந்த சிலை ராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவை (2017-18) முன்னிட்டு நிறுவப்பட இருக்கிறது.

இந்த திட்டம், திருதண்டி சின்ன ஜீயர் தலைமையில் நடக்கிறது. விரைவில் இந்த வருடம் தொடக்கத்தில் இந்த சிலை நிறுவப்பட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. வேலைகள் இன்னும் முடியாததால், விரைவில் இந்த சிலை நிறுவப்படும் என்று கூறப்படுகிறது. 

சமீபத்தில் சர்தார் வல்லபாய் படேல், சிலை மூவாயிரம் கோடியில் குஜராத்தில் நிறுவப்பட்டது நினைவிருக்கலாம். இதையடுத்து இந்த பிரமாண்ட சிலை ஐதராபாத்தில் அமைய இருக்கிறது. 


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close