[X] Close

வாட்ஸ் அப்-புக்கு போட்டி... வெல்கம் சிக்னல் மெசென்ஜர்...

Introducing-Signal-Private-Messenger-app

ஸ்மார்ட்போன் பயனாளர்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாததவர் யாரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப்பின் தாக்கம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் உலாவருகிறது. ஆனால் அதனை முறியடிக்கும் விதத்தில் சிக்னல் மெசென்ஜர் எனும் புதிய சாட்டிங் ஆப் அறிமுகமாகியுள்ளது.


Advertisement

வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கத்தில் புதிதாக பல புதிய சேவைகளை வாட்ஸ் அப் அறிமுகபடுத்தி வந்தாலும், சில புதிய அப்டேட்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் அப்-ஐ போன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு ஆப் சிக்னல் மெசென்ஜர். இது வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. இதனை ஸ்மார்ட்போன், ஐபேட்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப்-ஐ போன்று மெசேஜ், வீடியோ கால் ஆகியவற்றினை செய்ய இயலும். அதுமட்டுமின்றி, போட்டோக்கள், பைல்கள் போன்றவற்றினை நாம் பகிர்ந்து கொள்ள இயலும். இதில் End to End Encryption முறை பயன்படுத்தப்படுவதால் நமது தகவல்கள் திருடுவது தடுக்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close