Published : 08,Nov 2018 02:52 AM

உ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்!

-Ready-To-Rename-Ahmedabad-As-Karnavati--Says-Gujarat-Govt

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்தின் பெயரை கர்ணாவதி என்று மாற்ற அரசு ஆர்வமுடன் இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர், நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில்  உள்ள அலகாபாத் நகரம்,  'பிரயாக் ராஜ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பைசாபாத் மாவட்டத் தின் பெயர் ’அயோத்யா’ என மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல், அகமதாபாத் நகரத்தின் பெயரை கர்ணாவதி என்று மாற்றுவது பற்றித் தெரிவித்துள்ளார். 

(நிதின் படேல்)

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ மக்கள், அகமதாபாத்தின் பெயரை கர்ணாவதி என மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு போதுமான ஆதரவு கிடைத்தால், சட்ட பிரச்னைகள் நீங்குமானால் பெயரை மாற்ற அரசு தயாராக உள்ளது’ என்றார். 

11 ஆம் நுாற்றாண்டில், ஆஷாவல் என்றழைக்கப்பட்ட இந்தப் பகுதியை, சாளுக்கிய மன்னன் கர்ணா போரிட்டு வென்றார். பின்னர் சபர்மதி ஆறு பகுதியில் அமைந்த இந்த நகருக்கு, 'கர்ணாவதி' என பெயரிட்டு அதை உருவாக்கினார்.

பின், இஸ்லாமியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியைக் கைப்பற்றிய சுல்தான் அஹமது ஷா, 'அஹமதாபாத்' என மாற்றினார் என்று கூறப்படுகிறது.

இந்த கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ், அகமதாபாத் நகரின் பெயர் மாற்றப்படும் என்று பாஜக கூறுவது இன்னொரு தேர்தல் ஏமாற்று வித்தை  என்று தெரிவித்துள்ளது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்