டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்துவந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் இன்று அதிகாலையில் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, உடனடியாக தகனம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி, டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் கடந்த 6 மாதங்களாக படித்து வந்தார். பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் அவர் தனியாக தங்கியிருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் தோழி ஒருவர் அவரின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீமதி சடலமாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்து டெல்லி காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடல் அவரின் தந்தை தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடல் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு இன்று அதிகாலையில் கொண்டு வரப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே மாணவி தங்கியிருந்த அறையில் இருந்து தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்னை மன்னித்து விடுங்கள் என பெற்றோரிடம் மாணவி வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், தம்பியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide