ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் யாரும் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் அதிகம்தான். அவரின் விளையாட்டை காண்பதற்காக மட்டுமே போட்டியை பார்த்த பலர் உண்டு. இப்போது கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வில் இருந்தாலும், அவரின் புகழ்பாட ஆயிரக்கணக்கான ரசிர்கர்கள் இருக்கிறார்கள்.
Read Also -> கனவுக்கு தடை போட்ட புற்றுநோய் ! மீள்வாரா ரோமன் ?
சச்சினும் தன் ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார். குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், வெளிநாடுகளுக்கு செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதை சமாதானப்படுத்துவார். இத்தகைய புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளும். ஏராளமானோர் புகைப்படங்களை ஷேர் செய்வதும் உண்டு.
Read Also -> நாளை 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் அசத்துமா இந்திய அணி?
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் பெண் வீராங்கனைகள் புடைசூழ கிரிக்கெட் ஆடுகிறார் சச்சின். புகைப்படத்திற்கான கேப்ஷனில், “ கிரிக்கெட் விளையாடுவதை விட ஒரு சிறந்த நிகழ்வு இருக்கிறது என்றால் அது மலைகளில் கிரிக்கெட் விளையாடுவதுதான்” என கூறியுள்ளார். ஆம். மலை சார்ந்த பகுதிகளில் சச்சின் கிரிக்கெட் ஆடுவதுபோலத் தான் அந்த புகைப்படமும் உள்ளது. மேலும் கூறியுள்ள சச்சின் டெண்டுல்கர், “ பூட்டான் கிரிக்கெட் அணியுடன் மீண்டும் ஆடுகளத்துக்கு விளையாட வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அணிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!