[X] Close

முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

Case-Filed-on-Dindigul-Leoni-for-CM-and-Deputy-CM-troll-speech

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் மறைவிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய லியோனி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாண்டிபஜார் உதவி ஆய்வாளர் மணிமேகலை புகார் அளித்துள்ளார். அரசாங்கத்தை அவர் விமர்சித்து பேசியதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் லியோனி மீது அமைதிக்கு குந்தகர் விளைவித்தல், மிரட்டுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Read Also -> டிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்


Advertisement

Advertisement
[X] Close