[X] Close

“தமிழ்க் கையெழுத்திற்காக ஒரு பாடல்” - ஜி.வி.பிரகாஷ்

we-will-release-a-song-about-Tamil-language-says-gv-prakashkumar

தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக சகாயம் ஐஏஎஸ் வரிகளில் தான் இசையமைத்த பாடலை இன்று மாலை வெளியிட போவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்


Advertisement

தமிழ் திரையுலகில் ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘மதராசபட்டினம்’ ‘ராஜா ராணி’  உள்ளிட் பல ஹிட் கொடுத்தவர். பிறகு நடிகர் அவதாரம் எடுத்த இவர் ‘டார்லிங்’,‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’,‘நாச்சியார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் போராட்டம், நீட் பிரச்னை, மீனவப்பிரச்னை எனப் பல சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த மாதம் ‘மக்கள் பாதை‘ அமைப்பு நடத்திய தமிழ் கையெழுத்து இயக்கத்தில் சகாயம் ஐஏஎஸ் அவர்களுடன் கலந்து கொண்டு தமிழ்க் கையெழுத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் ட்விட்டரில் பதிவிட்ட ஜி.வி.பிரகாஷ்  “உலகம் வென்ற தமிழ், நம்மை கர்வம் கொள்ள வைத்த தமிழ், என்னை ஆட்கொண்ட தமிழ்... இனி புதிய விதி செய்யும் என் ‘கையெழுத்துகள்’தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்” எனப் பதிவிட்டு தன்னுடைய கையெழுத்தை தமிழில் பகிர்ந்தார். மேலும் அனைவரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.


Advertisement

இந்நிலையில் சகாயம் ஐஏஎஸ் வரிகளில் தான் இசையமைத்த பாடலை இன்று மாலை வெளியிட போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,“சங்கம் வைத்து பல்லாயிரம் ஆண்டுகள் மொழி வளர்த்த என் முன்னோர்களின் வழி நின்று தமிழ் மொழியின் ஏற்றத்திற்கு சகாயம் வரிகளில் என் சிறு பங்களிப்பாக இசையமைத்துள்ள பாடல் #தமிழைஏற்றிடுவோம் #tamizhaiYetriduvom இன்று மாலை 6 முதல்” என்று தெரிவித்துள்ளார். 

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close