Published : 06,Sep 2018 09:50 AM
“7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்”- உச்சநீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அரசுக்குள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், சட்டப்பிரிவு 435-ன் படி சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுடனே 7 பேரை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Read Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’
இந்தநிலையில் மீண்டும் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதற்கு, 7 பேரையும் விடுவிக்க முடியாது எனக்கூறி தமிழக அரசின் கோரிக்கையை ஏப்ரல் 14-ஆம் தேதி மத்திய அரசு நிராகரித்தது.
Read Also -> கொத்தடிமையாய் இருந்து உதவியாசிரியரான கதை.. - ரியல் ‘வாகைசூட வா’
Read Also -> குட்கா ஊழல் வழக்கு : 2 பேர் கைது
அதனால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைக்க பேரறிவாளன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதனால், சட்டப்பிரிவு 161-ன்படி 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.