Published : 09,Jan 2017 08:25 AM

கைவிட்ட பருவமழை: நெல் சாகுபடி சரிவு

Abandoning-the-monsoon-rice-crop-decline

வடகிழக்குப் பருவ மழை குறைவாகப் பெய்ததால், த‌மிழகத்தில் நெல் சாகுபடிப்‌ பரப்பு 40 சதவிகிதம் குறைந்திருப்பதாக மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் என்ற முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் 29 லட்சத்து 55 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்ததாகவும், அது இந்த ஆண்டில் 17 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கராகக் குறைந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நெல் மட்டுமின்றி பருப்பு மற்றும் பிற தானியங்களின் சாகுபடி பரப்பும் 9 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கரில் இருந்து 8 லட்சத்து 88 ஆயிரம் ஏக்கராக குறைந்துள்ளதாகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்