[X] Close

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

DMDK-will-contest-separately-in-Parliament-election--Vijayakanth

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

தனது பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று மக்களுக்கு உதவிட தொண்டர்கள் பாடுபட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கும் பாதையில் தேமுதிக பயணித்துக் கொண்டிருப்பதாகவும், எதிர்கால பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், தமிழக மக்கள் தங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close