Published : 22,Aug 2018 02:06 AM

பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்த தடை அவசியமில்லை: மத்திய அரசு கருத்து

Centre-opposes-complete-ban-on-sale-of-crackers-during-Diwali-in-top-court

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு விற்பனையை தடை செய்யக் கோரியும், பட்டாசு உற்பத்திக்கு முழுமையாக தடை விதிக்க கோரியும் தொடரப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன்பு கடந்த 14-ம் தேதி விசாரணைக்கு வந்தன. அப்போது, பட்டாசுகளால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் குறித்து ஆக.21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் நட்கர்னி தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பட்டாசு வெடிக்க ஒட்டுமொத்தமாக தடை விதிக்க அவசியம் இல்லை என்றும் அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை மட்டும் தடை செய்வதுடன் அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர், பட்டாசு விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொடுக்கக் கூடாது என்றும் வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்