பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இடுக்கி அணையில் இருந்து 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதகுகள் வழியாக நீர் திறக்கப்படும் அந்தக் காட்சி கண்களைக் கவர்வதாக இருக்கிறது.
கேரளாவில் பெய்துவரும் கன மழையால், இடுக்கி அணை விண்ணில் இருந்து பார்க்கும் போது மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. குறவன்-குறத்தி மலைகளுக்கு இடையே ஆர்ச் வடிவில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 1973ல் கட்டப்பட்ட இந்த அணை, கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 403 அடி உயரம் கொண்டது. தொடர் மழையினால் அணையின் நீர்மட்டம் 2 ஆயிரத்து 401 அடியாக உயர்ந்துள்ளது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு காணரங்களுக்காக முன்னெச்சரிக்கையாக வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆகையால் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதிலும் அணை நிரம்பி 5 மதகுகளும் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. அணையில் இருந்து திறக்கப்படும் இந்த நீர், செறுதோணி ஆற்றில் கலந்து வாழைத்தோப்பு வழியாக செல்கிறது. எர்ணாகுளம் மாவட்டத்திலும் நீர் பாய்ந்து இறுதியாக அரபிக் கடலில் கலக்கிறது. அதிக அளவு நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!