Published : 26,Mar 2017 05:41 AM

கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்தாத மக்கள்: சுத்தப்படுத்த நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்கள்

People-forced-to-clean-up-Toilets-waste-by-hand

தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து பெருமாள்கவுண்டன்பட்டிச் செல்லும் சாலையில் அங்குள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பாக, சுமார் 6லட்ச ரூபாய் திட்ட மதீப்பீட்டில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இருப்பினும், தற்பொழுது வரை அப்பகுதி பெண்கள் சுகாதார வளாகத்தைப் பயன்படுத்தாமல் அங்குள்ள பிரதான சாலையையே திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததே திறந்தவெளி கழிப்பிடத்தை அவர்கள் பயன்படுத்த காரணம். இதனால் வேறு வழியின்றி உயர் அதிகாரிகளின் உத்தரவுபடியே துப்புரவு பணியாளர்கள் மனித கழிவுகளைச் சுத்தப்படுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர். பாதுகாப்பு உபரகரணங்கள் இல்லாமல் பணியாளர்கள் துப்புரவு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதியதலைமுறையில் செய்தி வெளியிட்டு இருந்தும் இன்றளவும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போடி ஊராட்சி ஒன்றிய அலுவலர் சரவணனைத் தொடர்பு கொண்டு பேச முற்பட்ட பொழுது தொடர்பு கொள்ள முடியவில்லை.

சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், துப்புரவு பணியாளர்களின் நிலைமையை, இதுபோன்று அசுத்தம் செய்யும் பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்