Published : 02,Aug 2018 06:48 AM

கருணாநிதி பிறவியிலேயே போராளி: பினராயி விஜயன்..!

Karunanidhi-is-fighter-from-the-birth--Pinarayi-vijayan

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு வந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டறிந்தார்.

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனைக்கு வந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று கேட்டறிந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்பி கனிமொழி உள்ளிட்டோரை சந்தித்த பினராயி விஜயன், கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்தார். அவரிடம், சிகிச்சை தொடர்பான விவரங்களை மு.க.ஸ்டாலினும் மருத்துவர்களும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் பூரண குணமடைய வாழ்த்துவதாக குறிப்பிட்டார். கருணாநிதி பிறவியிலேயே போராளி என்றும் மிகுந்த மன உறுதி உடையவர் என்றும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்