[X] Close

உத்தரப் பிரதேசத்தில் கனமழைக்கு 69 பேர் உயிரிழப்பு 

69-killed-in-rain-related-incidents-in-UP-in-four-days

உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி, 69 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 86 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சஹரன்பூரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்‌தரவிட்டுள்ளார். குறிப்பாக அபாயகரமான நிலையில் இருக்கும் கட்டடங்களை அடையாளம் கண்டு, அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான பணிகளையும் துரித கதியில் மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close