விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தில் இருந்து ‘அதிரூபனே’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
விக்ரம் - ஹரி கூட்டணியில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான படம் சாமி. விறுவிறுப்பன திரைக்கதை, ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகி விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ தயாராகி வருகிறது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், முக்கிய கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், வில்லனாக பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாமி ஸ்கொயர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்-ஹரி கூட்டணியில் வெளியான ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2 பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப்படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானதையடுத்து நாளை மாலை 5 மணிக்கு ‘அதிரூபனே’ என்ற பாடல் வெளியாகிறது. படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்து திரைக்கு வர தயாராகியுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!