இந்திய ஏ அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு தொடரில் பங்கேற்றது. இந்திய ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணி, கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பங்கேற்கும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பெக்கன்ஹம் நகரில் நடந்து வருகிறது. முதலில் விளையாடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 42.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா, மயங்க் அகர்வால், ஜெயந்த யாதவ், அங்கித் ராஜ்புத் ஆகிய 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகப்பட்சமாக விஹாரி 37 ரன்களும் விஜய் சங்கர் 34 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தரப்பில் ஷெர்மான் லெவிஸ், செமர் ஹோல்டர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 383 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுனில் அம்பரிஸ் 128 ரன்களும் சும்ரா புரூக்ஸ் 91 ரன்களும் எடுத்தனர். இந்திய ஏ தரப்பில் அங்கித் ராஜ்புத் 4 விக்கெட்டுகளும் நவ்தீப் சைனி, நதீம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அடுத்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்திருந்தது. பிருத்வி ஷா அபாரமாக ஆடி 188 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 68 ரன்களும் ரவிகுமார் சமர்த் 137 ரன்கள் எடுத்தனர். கருண் நாயர் 93 ரன்கள் எடுத்த நிலையில் லெவிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்ரீகர் பரத் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 6 விக்கெட் இழப்புக்கு 609 ரன்கள் எடுத்து நிலையில் டிக்ளர் செய்யப்பட்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது. அந்த அணியின் பிளாக்வுட் அதிகப்பட்சமாக 61 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் கேம்பல் 44 ரன்களும் அம்பரிஸ் 42 ரன்களும் எடுத்தனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!