டெல்லி துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவை சகாக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் போராட்டத்தை நிறுத்த வேண்டும், நியாய விலைக் கடைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கைகளுக்காக 3 அமைச்சர்களுடன் சேர்ந்து கடந்த 11 ம் தேதி டெல்லியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது ஆளுநர் அனில் பைஜால் கோரிக்கைகளை ஏற்கவில்லை, எனவே ஆளுநரின் அலுவலகத்தின் வரவேற்பு அறையிலேயே அமைச்சர்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து ஆளுநர் அலுவலகத்தில் கடந்த செவ்வாய் கிழமை முதல் அவரது அமைச்சரவை சகாக்கலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரா ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சத்யேந்திரா உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசோடியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், அரசுப் பிரதிநிதியின் அலுவலகத்தில் 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. மேலும் கெஜ்ரிவாலின் இந்தத் தர்ணா போராட்டத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மற்றும் தேசிய தலைவர்கள் சிதாராம்யெச்சூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல எதிர்க்கட்யினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix