’யோ - யோ’ உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால், டெஸ்ட் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அறிமுக வீரராக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. அங்கு மூன்று டி20 தொடர், மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்கு முன்பாக, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது.
(இஷான் கிஷான்)
டி20, ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்திய ’ஏ’ அணிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வீரர்களுக்கும் யோ யோ உடல் தகுதி தேர்வு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றால் மட்டுமே அணியில் இடம்பெற முடியும் என்பதால் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யோ யோ உடல் தகுதி தேர்வில் தேர்வு பெறவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் முத்தரப்புத் தொடரில் வரும் 22-ம் தேதி பங்கேற்கிறது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளது.
(நவ்தீப் சைனி)
டெஸ்ட் அணி வீரர்களுக்கான யோ-யோ தகுதி தேர்வில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தோல்வி அடைந்தார். அதனால் அவர் நீக்கப்பட் டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். சைனி 31 முதல் தர போட்டியில் விளையாடி 96 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி பெங்களூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்