‘காலா’ படத்தில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஜீப்பை அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்களை சிறப்பிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஆனந்த் மகேந்திரா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஒருமுறை கேரளாவில் ஆட்டோ ஒன்றை மகேந்திரா கார் போல் வடிவமைத்தவரை கண்டறிந்து, அவருக்கு புதிய நான்கு சக்கர வாகனம் ஒன்றை வழங்கினார். அத்துடன் அவர் மகேந்திரா கார் போல் வடிவமைத்திருந்த காரை நினைவாக பெற்றுக்கொண்டார். அத்துடன் மகேந்திரா காரின் மூலம் உணவகம் நடத்தி வந்த பெண்ணை கண்டுபிடித்து, அவருக்கு புதிய கார் ஒன்றை வழங்கினார்.
இந்நிலையில் ‘காலா’ படத்தில் பயன்படுத்தப்பட்ட காரை கண்டுபிடித்து அதை ஆனந்த் மகேந்திரா வாங்கியுள்ளார். அத்துடன் தனது நிறுவனத்தின் ஊழியர்களை ‘காலா’ரஜினிகாந்த் போல வேடமணிந்து, அந்த ஜீப்பில் அமர்ந்து புகைப்படம் எடுக்க வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மகேந்திரா வாகனங்களை பிரபலமடையச்செய்யும் விதமாகவும், பெருமைபடுத்தும் விதமாகவும் அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!