சென்னையில் இன்று ஒரே நாளில் 4 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி சாலையில் சென்றவர்களிடம் வழிப்பறி செய்யப்பட்ட நிகழ்வு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தவெளிபாக்கத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி கனகராஜ். காலைநேரத்தில் காய்கறி வாங்குவதற்காக கோயம்பேட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆர்.கே.சாலை மேம்பாலத்தில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் கனகராஜை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.17,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர்.
இதே போல் தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டபிரபு , தனது நண்பருடன் தேனாம்பேட்டை மூப்பனார் பாலத்தில் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5,000, அவரிடமிருந்த செல்போன்களை பறித்தனர். இதை கண்ட பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து அபிராமபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் வழிப்பறி செய்தவர்கள் சென்னை ஆயிரம் விளக்கைச் சேர்ந்த அப்பாஸ் மற்றும் விக்கி என தெரியவந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப்பேருந்து நடத்துனர் கார்த்திகேயனிடம் வழி கேட்பது போல் நடித்து அவரை கத்தியால் தாக்கிய இரண்டு பேர், நகையை பறிக்க முயன்றனர். அப்போது கார்த்திகேயன் கூச்சலிட்டதை கேட்டு பொது மக்கள் கூடியதால் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இதேபோல் வேப்பேரியில் ஐ.டி. ஊழியர் ஷாஹிர் அகமதுவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன், நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். தொடர் வழிப்பறி சம்பவங்களால் சென்னை நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!