சென்னை அடையாறில் முதலமைச்சர் வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலைக்கு அருகிலேயே 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் இல்லத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள திரு.வி.க. பாலத்தில் 50-க்கும் அதிகமான இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ பந்தயம் நடத்தினர். இரவில் அதிவேகமாகவும், வீலிங் செய்தபடியும் இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் ஓட்டிச் சென்றதால் சாலையில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் விரைந்து வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் ரேஸுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். முதலமைச்சர் வீட்டுக்கு அருகிலேயே ரேஸ் நடப்பதாக பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!