நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4-ம் தேதி வரை கைது செய்ய கூடாது என திருச்சி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை இடைகாலதடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்
" கடந்த 19 ஆம் தேதி,திருச்சி விமான நிலையம் வந்த போது தன்னை வரவேற்க வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், வைகோவை வரவேற்க வந்த மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ; அதில் 8 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம், விமான நிலையத்தில் புகாரளித்தனர். சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடக்கும் போது அந்த பகுதியில் தான் இல்லை என்பதால் கைது செய்வதில் இருந்து முன்ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை ஜூன் 4 ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என நீதிபதி திருச்சி காவல்துறைக்கு அறிவுறுத்தினார். மேலும் வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்