தூத்துக்குடியில் மக்கள் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாமல் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பேரவையில் முதலமைச்சர் அறிக்கை தாக்கல் செய்தார். அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 22ஆம் தேதி தடையை மீறி, சில அரசியல் கட்சிகள் போராட்டக் குழுவினருடன் இணைத்துகொண்டு ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை கூறியுள்ளார். கூட்டத்தில் சிலர் ஊடுருவி காவல்துறையினர் மீது கல்லெறிவது, ஆட்சியர் அலுவலகத்தை சேதப்படுத்துவது, வாகனங்களுக்கு தீ வைக்கும் செயல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரவும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்தப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் அமைதி திரும்ப ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டதையும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 4 அமைச்சர்கள் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, நிவாரணத் தொகையை வழங்கியதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்