[X] Close

ஏழைகளின் மருத்துவர் அபிஜீத்

Doctor-treats-poor--underprivileged-for-free-in-Pune

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கி மருத்துவர் ஒருவர் ஆச்சரியப்படுத்துகிறார். 

அவசரமான இன்றைய உலகத்தில் மனிதாபிமானம் அப்படின்னா என்ன? என்று கேட்கிற நிலையில் தான் உள்ளோம். அன்றாடம் நடக்கும் ஏராளமான சம்பவங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்த மருத்துவர் அபிஜீத் (Abhijeet) இதில் விதிவிலக்காக உள்ளார். ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட இவர், இலவச மருத்துவ சிகிச்சைகளை அளித்து வருகிறார். அதுவும் அந்த மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று தனது சேவையை வழங்கி வருகிறார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளும் இவர் மருந்துகளையும் இலவசமாக வழங்கிவருகிறார். தேவை ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குகிறார்.

இதுதொடர்பாக அபிஜீத் கூறுகையில், தினசரி கோவில்களுக்கும், மசூதிகளுக்கும் செல்கிறேன். அங்கு வாசலில் அமர்ந்து யாசகம் பெறும் பிச்சைக்காரர்களுக்கு என்னால் முடிந்த மருத்துவ சேவையை வழங்குகிறேன். என் அடிப்படை நோக்கம் அவர்கள் வேலைக்குs சென்று உழைக்க வேண்டும் என்பது தான். அவர்கள் தொடர்ந்து பிச்சையெடுக்க கூடாது. அதனால் சிகிச்சை அளிக்கிறேன்’ என்கிறார், இந்த மனிதாபிமான மிக்க மருத்துவர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close