[X] Close

‘நடுத்தெருவுல நிக்குறேன் சார்’- கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி கிடந்த நபர்..!

Man-suicide-attempt-in-collector-office

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபர் மண்ணெண்ணெய் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். நெடுஞ்சாலை ஓரம் இருந்துள்ள இவரது வீட்டை நெடுங்சாலைத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் தனக்கு வேறு பகுதியில் நிலம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி சங்கர் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் நிலம் ஒதுக்கப்பட்டு அதற்கான முறைப்படி பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.


Advertisement

இதனால் விரக்தியடைந்த சங்கர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்துள்ளார். எத்தனை முறை மனு அளித்தும் தனக்கு பலன் கிடைக்கவில்லையே என வருத்தம் அடைந்த சங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் வைத்து மண்ணெண்ணெய் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வர, சங்கரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்கொலை முயற்சிக்கு முன்னர் சங்கர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் சிலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ள சங்கர் அதனால்தான் தற்கொலை முடிவை எடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வீடு இல்லாததால் தான் நடுத்தெருவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள சங்கர், மனைவி மற்றும் மகள் பிரிந்து தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் மண்ணெண்ணெய் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

Advertisement
[X] Close