கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்திற்கு, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.
எந்திரன் 2.ஓ, காலா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் முதல் முறை
ரஜினிகாந்தை வைத்து இயக்குகிறார் என்பதும், விஜய் சேதுபதி முதல் முறை ரஜினியுடன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்திற்கு தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு, ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த தகவலை திருநாவுக்கரசு, அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் ரஜினியின் அடுத்த படத்திற்கு ஒளிப்பதிவு
செய்வதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இவர் சூர்யா நடித்த ‘24’ படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருது பெற்றவர். கார்த்திக்
சுப்புராஜின் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த ‘மெர்க்குரி’ படத்திற்கும் திருநாவுக்கரசு தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அந்தக்
கூட்டணியே தற்போதும் தொடர்கிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix