[X] Close

திட்டங்களை அரசு உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறது -எடப்பாடி பழனிசாமி

edappadi-palanisamy-opened-the-new-Bridge

அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் அதிமுக அரசு உரி‌ய நேரத்தில் நிறைவேற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் 82 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி ‌பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். மேலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 பாலங்கள் என மொத்தம் 90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 3 மேம்பாலங்களையும் சேலத்தில் முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் சாலை பாதுகாப்பு தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார். 

இதனை‌யடுத்து உரையாற்றிய முதலமைச்சர், அறிவிக்கப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும் அரசு உரி‌ய நேரத்தில் நிறைவேற்றி வருவதாக கூறினார். சேலம்-சென்னை பசுமை ‌வழி சாலை அமைப்பதன் மூலம் தொழில் வளம் பெருகும் என கூறி‌ய முதலம‌ச்சர் ஆத்தூர் புறவழிச்சாலை அமைக்க 55 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


Advertisement


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close