கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுமாறு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தவும் கழிவறைகளை சுத்தம் செய்து, பழுதுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள், குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத் தில் புதர்கள், கற்குவியல்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சரிசெய்யவும், பள்ளங்கள் ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அவற்றை மூட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டடம், கூரை, கதவு, ஜன்னல்களை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்