Published : 13,May 2018 04:37 AM

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

SriRangam-Temple-Festival

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் தேர்த் திருவிழா கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் தொ‌டங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் வீதி உலா ந‌டைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தேர்மண்டபத்தை ‌நம்பெருமாள் வந்தடைந்தார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளின் நாமத்தை விண்ணதிர முழங்கி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்