[X] Close

கர்நாடகாவில் 70 சதவீத வாக்குகள் பதிவு

70--votes-recorded-in-Karnataka-Election

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதிக்கும், ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதால்‌ ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

வாக்களிப்பதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்தது. இதில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close