‘சீமராஜா’ இயக்குநர் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படிப்பிடிப்பு வேலைகள் மிக வேகமாக நடைப்பெற்று வருகின்றனர். இந்தப் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜேஷ் இயக்க உள்ள காமெடி படத்தில் நடிக்க உள்ளார். எப்போதும் ஒரு படத்தின் வேலைகள் முடிவடைந்த உடன்தான் அடுத்த படத்திற்கு நடிக்கப் போவார் சிவா. சமீபகாலமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிப்பதை வழக்கமாக்கி வருகிறார்.
இந்நிலையில் ‘சீமராஜா’ படத்தின் இயக்குநர் பொன்ராமின் பிறந்தநாளை படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளனர் அப்படக்குழுவினர். அந்த விழாவில் சிவாவும் கலந்து கொண்டு இயக்குநருக்கு கேக் ஊட்டிவிட்டிருக்கிறார். அதற்கான படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பொன்ராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்ததில் இருந்தே சிவாவின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக பொன்ராம் மாறிவிட்டார். அப்படம் சிவாவின் திரை வாழ்க்கையில் பெரும் வெற்றியை ஈட்டித்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!