மும்பை இண்டியன்ஸ் விக்கெட் கீப்பருக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி, விக்கெட் கீப்பிங் பற்றி டிப்ஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதில் தோனிக்கு, தனி குஷி. கிரிக்கெட் பற்றி யார் என்ன கேட்டாலும் வெளிப்படையாக சொல்லிக் கொடுப்பார் அவர். உலக அளவில் சிறந்த விக்கெட் கீப்பரான தோனியின் வேகம் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்றிரவு மோதின. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கு இடையில் மும்பை இண்டியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான், தோனியிடம் விக்கெட் கீப்பிங் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு டிரிக் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார் தோனி. எப்படி கீப்பிங் செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தார். இதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் இஷான். இந்தப் புகைப்படத்தை மும்பை இண்டியன்ஸ் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. இருவரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் போது, தோனியை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது இஷானுக்கு. ஆனால் ’அதிரடி வேகம்’ தோனி, இஷான் பந்தை பிடிக்கும் முன்பே, பேட்டை கிரீஸுக்குள் வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!