சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நடிகர் சிம்பு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார். சினிமா துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே சினிமா துறை திண்டாடி வருகிறது. நடிகர் சங்க மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. பேசாமல் இருந்ததால்தான் இந்த பிரச்னையே வந்தது. எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. தமிழ்நாட்டின் மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பைவிட அதிகமான அன்பை வைத்திருக்கும் ஒரு மனிதர் என்றால் அது தோனி தான். கண்டிப்பாக தோனிக்கு இந்த விவகாரம் குறித்து தெரியும். நான் அவரை எந்த போராட்டத்திலும் ஈடுபட சொல்லவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என கூறவில்லை. போட்டிகளின் போது கருப்பு பேட்ஜ் அணியுங்கள் இல்லையென்றால், உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அல்லது செய்ய முடிந்ததை செய்யுங்கள் என தோனிக்கு கோரிக்கை வைக்கிறேன். தோனிக்கு நம் மீது மரியாதை உள்ளதால் இதனை அவரிடம் கேட்கிறேன்” எனத் தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி