[X] Close

ஹர்பஜனை விட்டுட்டாங்களே... கும்ப்ளே வருத்தம்!

Mumbai-will-miss-Harbhajan-s-experience--feels-Kumble

’அனுபவம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாதது மும்பை அணிக்கு இழப்புதான்’ என்று அந்த அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.


Advertisement

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை மும்பை அணிக்காக  விளையாடிக் கொண்டிருந்த சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்த ஐபிஎல்-லில் சென்னை அணிக்கு விளையாடுகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மும்பை அணியின் ஆலோசகருமான அனில் கும்ப்ளே, ’ஹர்பஜனின் அனுபவத்தை மும்பை இழந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். 


Advertisement

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’ஹர்பஜன் சிங் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர். அவர் இல்லை என்பதை அணி நிச்சயம் உணரும். குணால் பாண்ட்யா சிறந்த ஆல்-ரவுண்டர். இந்த முறை அவர், மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை வழிநடத்துவார். மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர்  இருந்த போதும் அவர் அனுபவமில்லாதவர். ஹர்பஜன் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு பெரிய இழப்பு. ஹர்பஜன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மல்லிங்காவின் பந்துவீச்சையும் மும்பை இந்தியன்ஸ் இழந்துவிட்டது. ஆனால், அவர் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மாறிவிட்டார்.


Advertisement

பும்ரா, பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்திபிஜுர் ரஹிம் ஆகியோர் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசுவார்கள். 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்றிருந்த பிருத்திவ் ஷா, நாகர்கோட்டி ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். 


 


Advertisement

Advertisement
[X] Close