காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் “முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்திற்கு மக்கள் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்தனர். இப்படி ஒரு போராட்டம் நடந்ததா என கேள்வி எழுப்பும் வகையில் போராட்டம் நடந்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது.இதற்கு காரணமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இன்று மாலை நடக்கவிருந்த அனைத்து கட்சி கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கும். 7 ம் தேதி காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்குகிறது. இப்பயணம் திருச்சி முக்கொம்பில் தொடங்கி கடலூரில் முடிவடைகிறது.மத்திய பாஜக அரசை தட்டிக் கேட்க மாநில அரசு தயக்கம் காட்டுகிறது. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற வேண்டும். அதிமுக ஆட்சியின் அவலங்கள் கவர்னருக்கு நன்றாகவே தெரியும், இதனால்தான் அவர் அடிக்கடி ஆய்வுக்கு செல்கிறார்.அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும் என அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி