[X] Close

அயர்லாந்து வரை சென்ற ஸ்டெர்லைட் போரட்டம்

sterlite-issue-go-s-Ireland

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அயர்லாந்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டம் 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துவரும் நிலையில் அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் உள்ள இந்திய தூதரகம் முன்பு திரண்ட ஏராளமானோர் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனவும், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்திய தூதரகத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close