[X] Close

உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை ? உயர்நீதிமன்றம் கேள்வி

tamil-nadu-local-election--madurai-High-Court--new-question

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திகுள் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கத்தைப் பெற்றுத்தரக்கோரி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர். அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக குழு அமைகப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழு ஆய்வு நடத்தி போர்க்கால அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பின்பும் வார்டுகள் மறுவரையறை செய்வது குறித்து பொதுமக்களிடம் இருந்து 19 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதைகேட்ட நீதிபதிகள் உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் செய்வது ஏன் எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழக தேர்தல் ஆணையம் 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close