Published : 22,Mar 2018 07:17 AM

தீக்குளித்த அங்கன்வாடி பணியாளர் உயிரிழப்பு: அதிகாரியை கைது செய்யக் கோரிக்கை

Anganwadi-worker-death--Protest-in-Nellai

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தீக்குளித்து உயிரிழந்த அங்கன்வாடி பணியாளரின் உடலை வாங்க மறுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த‌வர் சுமதி. இவர் கடந்த 9ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்க அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,அவரது உடலை வாங்க மறுத்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சுமதி பணியில் நீட்டிக்க பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளளார். இந்நிலையில், அவரை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த சுமதியின் மகளுக்கு அரசு வேலை வழங்கவும், சுமதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவார‌ணம் வழங்க வேண்டியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லையில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்