[X] Close

துணை மின்நிலையங்கள் அமைப்பதில் சிரமம்: பேரவையில் அமைச்சர் தகவல்

Difficult-To-Built-Electricity-Sub-Stations--Minister-Thangamani

சென்னையில் துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளதாக‌ தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை மின்நிலையங்கள் அமைப்பது தொடர்பாக துறைமுகம் தொகுதி உறுப்பினர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, துணை மின்நிலையம் அமைப்பதற்கு சென்னையில் இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் பல இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைப்பது தாமதமாகி வருவதாகத் தெரிவித்தார். துணை மின்நிலையங்கள் தேவைப்படும் பகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து தந்தால் அந்த இடத்தில் துணை மின்நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார். 

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பனை பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்கப்படுமா என திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மோர்பனை பகுதியில் ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் செலவில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவுபெறும் என்றும் தெரிவித்தார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close