Published : 15,Mar 2018 02:57 AM

தடையை எதிர்த்து ரபாடா அப்பீல்!

Rabada-appeals-ban

தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா அப்பீல் செய்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிப் பெற்றது. வெற்றிக்கு காரணமாக இருந்த ரபாடா, ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, ரபாடா அவுட்டாக்கினார். அப்போது அவரது தோள்பட்டையை ரபாடா உரசியபடிச் சென்றார். பின்னர் வார்னரை அவுட்டாக்கிவிட்டு, அவர் முகத்துக்கு நேராக ஆக்ரோஷமாக கத்தினார். இவை, சர்வதேச கிரிக்கெட் விதிமுறைக்கு எதிராக அமைந்ததாக புகார் கூறப்பட்டது. 

இதுபற்றி விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. மேலும், போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ரபாடா அப்பீல் செய்துள்ளார். இதையடுத்து இதுபற்றி விசாரிக்க ஐசிசி, விசாரணை அதிகாரியை நாளை நியமிக்கிறது. அவர் ஏழு நாட்களுக்குள் விசாரணை நடத்துவார். 


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்