[X] Close

டி வில்லியர்ஸ் பொறுப்பான ஆட்டம்: தென்னாப்பிரிக்கா முன்னிலை!

De-Villiers--mastery-puts-South-Africa-ahead

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில், டிவில்லியர்சின் பொறுப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். நிகிடி 3 விக்கெட்டுகளையும் பிலாண்டர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


Advertisement

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம், கம்மின்ஸ் பந்துவீச்சில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். எல்கரும் ரபாடாவும் ஆடி வந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. எல்கர் 57 ரன்கள், அம்லா 56 ரன்கள் எடுத்தனர். டிவில்லியர்ஸ் பொறுப்பாக ஆடி, 74 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்த வில்லியர்ஸ் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அந்த அணிக்கு தெம்பை தந்துள்ளது. பிலாண்டர் 14 ரன்களுடன் அவருக்கு துணையாக நிற்கிறார். 
மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. 


Advertisement

Advertisement
[X] Close