Published : 10,Mar 2018 09:22 AM

தொடங்கிய மறுநாளே ’நோட்டா’ ஷூட்டிங் நிறுத்தம்!

Notto-film-shooting-stopped

‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘நோட்டா’ படத்தின் ஷூட்டிங் தொடங்கிய மறுநாளே திடீரென்று நிறுத்தப்பட்டது.

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர், தமிழில் அறிமுகமாகும் படம், ’நோட்டா’. ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் மெஹ்ரின் ஹீரோயின். படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கியூப் பிரச்னை காரணமாக தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பதால், இனிமேல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர். மேலும்  பட விழாக்களை நடத்த வேண்டாம் என்றும் தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்தனர். சினிமா விழாக்கள் மற்றும் பிரஸ்மீட் போன்றவற்றையும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தனர். 

இதை மீறி ’நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடத்தினார் என்று கூறப்பட்டது. இதன் ஷூட்டிங்கும் நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பத்திரிகைகளில் ’நோட்டா’ மற்றும் அவர் தயாரிக்கும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களின் விளம்பரங்களை வெளியிட்டது பற்றியும் இதில் விவாதிக்கப்பட்டது. பின்னர் ஞானவேல் ராஜாவுக்கும் புதுப்படங்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையை மீறி ’தாராவி’ படத்தை வெளியிட்டதால் பவித்ரனுக்கும் தயாரிப்பாளர் சங்கம் ரெட் விதித்துள்ளது. இதையடுத்து இன்று நடந்த ’நோட்டோ’ படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்