[X] Close

பள்ளிக் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

The-Boy-Died-in-the-school-sewage-tank

சென்னை ஐயப்பன்தாங்கலில் தனியார் பள்ளியில் திறந்து இருந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி பயின்‌ற‌ சிறுவன் உயிரிழந்தான். 


Advertisement

பெரியகொளுத்துவான்சேரியைச் சேர்ந்த மோகன் என்பவரது‌ மூன்றரை வயது குழந்தை கிருதீஸ்வரன் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வந்தான். இன்று மதியம் இடைவேளையின் போது சிறுநீர்கழிக்கச் சென்ற குழந்தை திறந்திருந்த கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்தது. அதனை பார்த்த மற்ற மாணவர்களின் அலறலைக் கேட்டு வந்த, ஆசிரியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்து‌வர்கள் தெரிவித்தனர். பள்ளி நேரத்தில் கழிவுநீர்த்தொட்டியை திறந்து வைத்தது குறித்து பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close