[X] Close

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு

Kanchi-Kamakshi-Amman-Temple-closed

காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவைதொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு இன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

ஜெயேந்திரரின் மறைவிற்கு தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயேந்திரரின் மறைவைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close