[X] Close

900 புள்ளிகளை கடந்து கோலி சாதனை

ICC-Rankings-Virat-Kohli-crosses-900-point-mark-in-both-Test-and-ODIs

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 900 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஒருநாள் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோல், பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 787 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 


Advertisement

 

            

விராட் கோலி 909 புள்ளிகளை எட்டியதன் மூலம், தற்போது உள்ள வீரர்களில் தென்னாப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸுக்கு அடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 900 புள்ளிகளை கடந்தவர் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார். இதுவரை மொத்தம் 5 பேர் மட்டுமே சர்வதேச அளவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 900 புள்ளிகளை கடந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி 558 ரன்கள் எடுத்ததே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கோலி ஒருநாள் போட்டியில் 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பதைப் போல், டெஸ்ட் போட்டிகளில் 912 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

இந்திய அணியைப் பொறுத்தவரை முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் 887 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது. 

50 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக பேட்டிங் சராசரிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 208 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 9588 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 58.1. அவருக்கு அடுத்தபடியாக மைக்கல் பேவன்(53.58), ஏபி டிவில்லியர்ஸ்(53.5), எம்.எஸ்.தோனி(51.37), ஜோனதன் ட்ராட்(51.25) பெற்றுள்ளனர். 

       

அதேபோல், இருஅணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி அடைந்துள்ளார். விராட் கோலி இந்த தொடரில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 558 ரன்கள் எடுத்துள்ளார். கோலி அடுத்து ரோகித் சர்மா(491), ஜார்ஜ் பெய்லி(478), ஹாமில்டன் மசக்ட்ஸா(467), கிறிஸ் கெயில்(455) ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

        

 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close