[X] Close

‘எஜமான்’ 25 ஆண்டு கொண்டாட்டம்

25-years-celebration-of-rajini-ejamaan

ரஜினியின் ‘எஜமான்’ வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 


Advertisement

ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எஜமான்’.ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ என அழைத்த மீனா வளர்ந்து வந்து மீண்டும் ரஜினிக்கே ஜோடியாக நடித்த விஷயம் பெரிய அதிர்ச்சியை சினிமா வட்டாரத்தில் கிளப்பியிருந்தது. ரஜினி இப்படத்தில் பயன்படுத்திய வெள்ளை வேஷ்டி காஸ்ட்டியூம் அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.  வல்லவராயன், வானவராயன் போன்ற கதாப்பாத்திரங்கள் தமிழ் சினிமாவின் அஃமார்க் அடையாளங்களாக அமைந்தன. ‘எஜமான் காலடி மண் எடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்’ பாடல் மாபெரும் ஹிட்டானது. ஏவி.எம் நிறுவன தயாரிப்புகளில் இந்தப் படத்திற்கு தனித்த பெயர் கிடைத்தது..  

இந்நிலையில் இன்று ட்விட்டரில் #25YearsOfBBEjamaan என்ற ஹேஷ்டேக் போட்டு ரஜினியின் ரசிகர்கள் 25 ஆண்டு எஜமானை கொண்டாடி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close