[X] Close

ஒரு நாள் கிரிக்கெட் : இந்திய அணிக்கு கிடைக்குமா நம்பர் ஒன்?

India-s-chance-to-top-ODI-rankings

தென்னாப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, வெற்றிபெற்றால் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்து ஆறு போட்டிகள் கொண்ட, ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 

ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி, 4-2 என்ற கணக்கில் தொடரை வென்றால் முதலிடத்துக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் தென்னாப்பிரிக்க அணி, இந்த தொடரை டிரா செய்தாலே முதலிடத்தை தக்க வைக்கும். 5-1 என்று தொடரை வென்றால் இந்திய அணி, தரவரிசையில் 4-ம் இடத்துக்கு தள்ளப்படும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close