[X] Close

6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்திக்கத் தயார்: ரஜினிகாந்த் 

Ready-to-meet-if-the-election-comes-in-6-months--Rajinikanth

6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  கமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். கமலின் அறிவிப்பை தான் எதிர்பார்க்கவில்லை என்றார். அரசியலில் கமல்ஹாசனுடன் தான் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் முடிவு செய்யும்.6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் எனவும் அவர் கூறினார். எம்ஜிஆரின் கொள்கைகளை தமிழக கட்சிகள் ஓரளவு பின்பற்றுகின்றன என தெரிவித்தார்.


நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடும் பட்சத்தில் அது ரஜினிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close